Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டும் சிறுத்தையால் அச்சம் 

இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டும் சிறுத்தையால் அச்சம் 

இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டும் சிறுத்தையால் அச்சம் 

இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டும் சிறுத்தையால் அச்சம் 

ADDED : செப் 24, 2025 11:27 PM


Google News
வால்பாறை: இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டும் சிறுத்தையால், வாகன ஓட்டுநர்கள் பீதியடைந்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில், வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும் வன விலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன.

குறிப்பாக யானை, காட்டுமாடு, சிங்கவால்குரங்கு, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரத்திலேயே ரோட்டில் உலா வருகின்றன.

இந்நிலையில், வால்பாறை நகரிலிருந்து புதுத்தோட்டம் வழியாக ரொட்டிக்கடை செல்லும் ரோட்டில் சிறுத்தை, அடிக்கடி ரோட்டை கடக்கிறது.

குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை, பின்னால் சென்று விரட்டும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

புதுத்தோட்டம் வனப்பகுதியில் எல்லாவனவிலங்குகளும் உள்ளன. நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஒட்டி இந்த வனப்பகுதி அமைந்துள்ளதால், வன விலங்குகள் அடிக்கடி ரோட்டை கடப்பது வாடிக்கையாகி விட்டது.

புதுத்தோட்டம் ரோட்டில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வனத்துறையினர் பகல் நேரத்தில் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us