/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீரமாத்தி அம்மன் கோவிலில் திருவிழாவீரமாத்தி அம்மன் கோவிலில் திருவிழா
வீரமாத்தி அம்மன் கோவிலில் திருவிழா
வீரமாத்தி அம்மன் கோவிலில் திருவிழா
வீரமாத்தி அம்மன் கோவிலில் திருவிழா
ADDED : பிப் 11, 2024 11:57 PM
நெகமம்:நெகமம், செட்டியக்காபாளையத்தில் உள்ள வீரமாத்தி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது.
நெகமம், செட்டியக்காபாளையம் வீரமாத்தி அம்மன் கோவில் திருவிழா, நாளை, 13ம் தேதி துவங்குகிறது. மாலை, 3:00 மணிக்கு, காவல் தெய்வம் கருப்பராய சுவாமியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு, கலசம் முத்தரித்து அம்மனை அழைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
14ம் தேதி, காலை 11:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.