/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதைப்பொருட்கள் விற்று சொகுசு வாழ்க்கை; பைனான்ஸ் அதிபர் கைது போதைப்பொருட்கள் விற்று சொகுசு வாழ்க்கை; பைனான்ஸ் அதிபர் கைது
போதைப்பொருட்கள் விற்று சொகுசு வாழ்க்கை; பைனான்ஸ் அதிபர் கைது
போதைப்பொருட்கள் விற்று சொகுசு வாழ்க்கை; பைனான்ஸ் அதிபர் கைது
போதைப்பொருட்கள் விற்று சொகுசு வாழ்க்கை; பைனான்ஸ் அதிபர் கைது
ADDED : ஜூன் 19, 2025 05:48 AM
கோவை : கஞ்சா, மெத்தபெட்டமைன் விற்று, பைனான்ஸ் தொழில் செய்து வந்த நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து கோவை வரும் நபர்களை, போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடந்த, 17ம் தேதி காலை 9:00 மணிக்கு, குனியமுத்துார் போலீசார் கோவைப்புதுார் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்குள்ள ஒரு மைதானத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் காரில் இருந்த நபரிடம் விசாரித்தனர். அவர் அளித்த பதிலில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அவரிடம் நடத்திய சோதனையில், கஞ்சா, மெத்தபெட்டமைன் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம், துப்பச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார், 37 என்பதும், பைனான்ஸ் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. சதீஷ்குமாரின் உறவினர்கள் கோவையில் உள்ளனர்.
அவர்களை சந்திக்க சதீஷ்குமார் கோவை வந்து சென்றுள்ளார். அப்போது, கோவைப்புதுார் பகுதியில் அதிக மாணவர்கள் வந்து செல்வதைப்பார்த்த சதீஷ்குமார், மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்து, அதிக பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.
கோவைப்புதுார் பகுதியில் அறையெடுத்து தங்கி, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து, மாணவர்கள் உட்பட பலருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
போலீசார் அவரது அறையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு, 33 கிராம் தங்க பிரேஸ்லெட், 4 கிராம் மற்றும் 7 கிராம் மோதிரங்கள், ரூ.2 ஆயிரம் பணம் உள்ளிட்டவை இருந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.