/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாசாணியம்மன் கோவில் பணியாளர் குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டு விழா மாசாணியம்மன் கோவில் பணியாளர் குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டு விழா
மாசாணியம்மன் கோவில் பணியாளர் குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டு விழா
மாசாணியம்மன் கோவில் பணியாளர் குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டு விழா
மாசாணியம்மன் கோவில் பணியாளர் குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜூன் 19, 2025 07:42 AM

ஆனைமலை : ஆனைமலையில், மாசாணியம்மன் கோவில் பணியாளர் குடியிருப்பு கட்டுமானப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
ஆனைமலையில் புகழ் பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு, 6.19 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, திரவுபதி அம்மன் கோவில் ரோட்டில், மாசாணியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 6.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,11 குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், 'காணொளி' வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, நடந்த பூஜையில், எம்.பி., ஈஸ்வரசாமி, பேரூராட்சி தலைவர்கள் கலைச்செல்வி, ரேணுகாதேவி, இணை ஆணையர் ரமேஷ், உதவி ஆணையர் முத்துராமலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர்கள் அப்துல்லா, தாஜ்னிஷா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்,'ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
'ஏ' பிளாக்கில், உதவி ஆணையருக்கான ஒருவீடும், 'பி' பிளாக்கில், இரண்டு மேற்பார்வையாளர்களுக்கு, இரு வீடுகளும்; 'சி' பிளாக்கில், அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு என, எட்டு வீடுகள் என மொத்தம், 11 வீடுகள் கட்டப்படுகின்றன. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.