Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இடம் வாங்கித்தருவதாக 26 லட்சம் ரூபாய் மோசடி

இடம் வாங்கித்தருவதாக 26 லட்சம் ரூபாய் மோசடி

இடம் வாங்கித்தருவதாக 26 லட்சம் ரூபாய் மோசடி

இடம் வாங்கித்தருவதாக 26 லட்சம் ரூபாய் மோசடி

ADDED : அக் 20, 2025 10:59 PM


Google News
கோவை: சரவணம்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 47; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கணபதியை சேர்ந்த சேகர், 40 என்பவர் அறிமுகம் ஆனார். இருவரும் தொழில் ரீதியாக இணைந்து செயல்பட்டனர்.

விஜயலட்சுமி, தனது சேமிப்பில் மனை வாங்க திட்டமிட்டார். சேகரிடம் தெரிவித்தார். சேகர் மற்றும் அவரது கூட்டாளிகளான கணபதியை சேர்ந்த, மோகன், 42, பவன், 46, மற்றொரு விஜயலட்சுமி, 41 ஆகியோருடன் இணைந்து, மனை ஒன்றை காட்டினார்.

அந்த மனை, விஜயலட்சுமிக்கு பிடித்திருந்ததால், அதை தனக்கு வாங்கித் தருமாறு, சேகர் உள்ளிட்டோரிடம் தெரிவித்தார். இதற்காக சேகரிடம், ரூ.26 லட்சத்தை வழங்கினார்.

சேகர் மனையை வாங்கித்தராமல் காலம் தாழ்த்தினார். விஜயலட்சுமி விசாரித்தார். அப்போது விஜயலட்சுமிக்கு காட்டிய இடத்தை சேகர், வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிந்தது.

விஜயலட்சுமி பணத்தை திருப்பித்தர வலியுறுத்தினார். பணத்தை தராமல் மோசடி செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், நான்கு பேர் மீது வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us