Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காளான் வளர்க்க இலவச பயிற்சி

காளான் வளர்க்க இலவச பயிற்சி

காளான் வளர்க்க இலவச பயிற்சி

காளான் வளர்க்க இலவச பயிற்சி

ADDED : அக் 20, 2025 11:02 PM


Google News
கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், திறன் சார்ந்த காளான் வளர்ப்பு பயிற்சி, 25 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை சார்பில், மாதம் தோறும் ஒரு நாள் காளான் வளர்ப்பு பயிற்சியும், குறிப்பிட்ட இடைவெளிகளில், மூன்று நாள் சிறப்பு பயிற்சி, காளான் விதை உற்பத்தி பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது வெற்றி நிச்சயம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 25 நாட்களுக்கு இலவச, திறன்சார்ந்த காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

வரும் 27ம் தேதி முதல், நவ., 25ம் தேதி வரை நடக்கும் இப்பயிற்சி முகாமில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி, டிப்ளமோ, விவசாயிகள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம்.வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை. தொடர்புக்கு, 962694 96555, 63792 98064 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us