Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழிலாளர் திறனை உயர்த்தும் ஆடை உற்பத்தி பயிற்சி துவக்கம்

தொழிலாளர் திறனை உயர்த்தும் ஆடை உற்பத்தி பயிற்சி துவக்கம்

தொழிலாளர் திறனை உயர்த்தும் ஆடை உற்பத்தி பயிற்சி துவக்கம்

தொழிலாளர் திறனை உயர்த்தும் ஆடை உற்பத்தி பயிற்சி துவக்கம்

ADDED : அக் 13, 2025 11:48 PM


Google News
- நமது நிருபர் -

முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து, ஆடை உற்பத்தி சார்ந்து பகுதி நேர பயிற்சி அளிக்கும் மையம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

அப்பேரல் மெர்ச்சன்டைசிங், பேட்டர்ன் மேக்கிங், குவாலிட்டி கன்ட்ரோல், ஓவர் லாக், பிளாட் லாக், பவர், சிங்கர் டெய்லர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.

பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மணியன் கூறியதாவது:

ஆடை உற்பத்தி துறையில் புதிதாக அடியெடுத்து வைப்போர் மட்டுமின்றி, ஏற்கனவே பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழில் முனைவோரும் கூட, பயிற்சி பெற்றுவருகின்றனர்.

இதுவரை ஆறு பிரிவுகளாக 125 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது; பயிற்சி முடித்த, 50 பேருக்கு சான்று வழங்கப்பட்டுள்ளதோடு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏழாவது பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. அப்பேரல் மெர்ச்சன்டைசிங், குவாலிட்டி கன்ட்ரோல் பயிற்சி வகுப்பில், 15 பேர் சேர்ந்துள்ளனர். மேலும் 10 பேருக்கான இடங்கள் உள்ளன. இம்மாத இறுதிக்குள் சேரவேண்டும். கூடுதல் விபரங்களுக்கு: 78451 84962 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us