Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீபாவளி மகிழ்ச்சியை பிரகாசமாக்கும் பரிசுகள்

தீபாவளி மகிழ்ச்சியை பிரகாசமாக்கும் பரிசுகள்

தீபாவளி மகிழ்ச்சியை பிரகாசமாக்கும் பரிசுகள்

தீபாவளி மகிழ்ச்சியை பிரகாசமாக்கும் பரிசுகள்

ADDED : அக் 10, 2025 12:32 AM


Google News
கு டும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும், விளக்குகளின் திருவிழா வந்தாச்சு... இந்த நாள் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதற்கான நேரமாகும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மறக்க முடியாத பரிசுகளை கொடுத்து சிறப்பாக உணரச் செய்யுங்கள். கொடுப்பதன் மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சியை மேலும் பிரகாசமாக்கட்டும்.

உங்கள் உறவுகளுக்கு ஆரோக்கியமான பரிசு ஒன்றை வழங்க வேண்டும் என்றால், உலர் பழங்கள் சரியாக இருக்கும். இவை, தீபாவளிக்கு பரிசளிப்பதில் முக்கிய தேர்வாக இருக்கிறது. ஆரோக்கியம் மற்றும் செழிப்பை குறிக்கும் இவை, வணிகரீதியான பரிசுக்கு சிறந்ததாக இருக்கும். நண்பர்கள், உறவுகளுக்கு ஊட்டச்சத்து மிக்க நிறைந்த பரிசாக இருக்கும். பேனா, காபி கப், கீ செயின், தனிப்பயனாக்கப்பட்ட காலண்டர்கள், டைரிகள், போட்டோ பிரேம்ஸ் போன்ற பொருட்கள் பரிசுகளை அளிக்கலாம். இவை உங்கள் அன்புக்குரியவர்கள் மீது நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை வெளிப்பபடுத்தும். பரிசுகள் மட்டுமின்றி நினைவுகளாகவும் இருக்கும்.

நுணுக்கமான வடிவமைக்கப்பட்ட விளக்குகள், சுவர் தொங்கல்கள் அல்லது கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான பொருட்களான வீட்டு அலங்காரப் பொருட்களை பரிசளிக்கலாம். தனித்துவமான படைப்புகள் வீட்டிற்கு அழகு சேர்ப்பதுடன், நீங்கா நினைவுகளை அளிக்கும். பாட் செடிகள் மற்றும் மினி இன்டோர் பிளாண்ட் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். வீட்டினுள் காற்றை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, எந்த இடத்திற்கும் புத்துணுர்ச்சி அளிக்கும் அற்புத பரிசாக இருக்கும். அழகான, மணமிக்கது மற்றும் காற்றை சுத்திகரிக்கும் தாவரங்கள் உயிர்ப்புள்ள பரிசாக இருக்கும்.

இன்றைய தொழில்நுட்ப உலகில், எலக்ட்ரானிக் கேட்ஜட்டுகள் விரும்பாத ஆட்களே இல்லை. வயர்லெஸ் இயர் பட்ஸ், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், போர்டபிள் சார்ஜர், பவர் பேங்க் என அன்புக்குரியவர்களுக்கு தேவையானவற்றை பரிசளிக்கலாம். அவர்களின் அன்றாட வாழ்வில் இணையவுள்ள இவற்றை, தரமானதாக வாங்குவது முக்கியம். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் குழுவில், இவருக்கு என்ன பரிசு தான் வாங்கிக்கொடுப்பது என ஒருவர் இருப்பார். அத்தகைய நபர்களுக்கு, பரிசு கூப்பன்களை வழங்கலாம். பிடித்த ஸ்டோர், உணவகம், ஸ்பா, ஆன்லைன் பர்சேஸ் என பரிசு கூப்பன்களை வழங்கலாம். உண்மையிலேயே அவர்கள் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தையும் அவர்கள் பெற முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us