/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாணயம் விழுங்கிய சிறுமியால் பரபரப்பு நாணயம் விழுங்கிய சிறுமியால் பரபரப்பு
நாணயம் விழுங்கிய சிறுமியால் பரபரப்பு
நாணயம் விழுங்கிய சிறுமியால் பரபரப்பு
நாணயம் விழுங்கிய சிறுமியால் பரபரப்பு
ADDED : டிச 04, 2025 06:44 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் ஏழு வயது சிறுமி நேற்றுமுன்தினம் திடீரென ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். தகவல் அறிந்த பெற்றோர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். எக்ஸ்ரே எடுத்த பார்த்த டாக்டர், சிறுமியின் உணவு குழாய்க்கும், மூச்சு குழாய்க்கும் இடையில் நாணயம் சிக்கியிருந்ததை உறுதி செய்தார்.
இதையடுத்து, சிறுமியை தனியார் மருத்து வ மனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி விழுங்கிய நாணயம், செரிமான அமைப்பு பகுதி வழியாக வெளியேறி விடும்; பயப்பட வேண்டாம் என கூறி, அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பினர்.


