/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.51.17 கோடி வரி ஏய்ப்பு தங்க நகை வர்த்தகர் சிக்கினார் ரூ.51.17 கோடி வரி ஏய்ப்பு தங்க நகை வர்த்தகர் சிக்கினார்
ரூ.51.17 கோடி வரி ஏய்ப்பு தங்க நகை வர்த்தகர் சிக்கினார்
ரூ.51.17 கோடி வரி ஏய்ப்பு தங்க நகை வர்த்தகர் சிக்கினார்
ரூ.51.17 கோடி வரி ஏய்ப்பு தங்க நகை வர்த்தகர் சிக்கினார்
ADDED : செப் 13, 2025 09:29 PM
கோவை:கோவையில், தங்க நகை வர்த்தகத்தில், மூன்று விதமான சாப்ட்வேர்களை பயன்படுத்தி, பில்லில் மோசடி செய்து, 51.17 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மத்திய ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் பங்கர்கர் அறிக்கை:
கோவையில், பெரிய தங்க வர்த்தக நிறுவனத்தின் பல்வேறு மொத்த, சில்லரை வர்த்தக கடைகளில் ஜி.எஸ்.டி., துறை சார்பில், மார்ச் 18 மற்றும் ஆக., 6ல் சோதனை நடந்தது. முறையான ஜி.எஸ்.டி., பில் இன்றி, வரி ஏய்ப்பு செய்வதாக எழுந்த சந்தேகத்தில் இச்சோதனை நடந்தது.
இதில், குறிப்பிட்ட நிறுவனத்தில், தங்கள் வியாபாரத்துக்காக, மூன்று விதமான சாப்ட்வேர்களை பயன்படுத்தி பில் வழங்கியுள்ளனர்.
ஜி.எஸ்.டி.,யுடன் ரசீது வழங்க ஒரு சாப்ட்வேர், தங்களின் ஜி.எஸ்.டி., மற்றும் ஜி.எஸ்.டி., இல்லாமல் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளையும் சேமித்து வைக்க ஒரு சாப்ட்வேர், கண்காணிப்பதற்காக, இரண்டாவது ரசீதை பிரதியெடுக்கும் வகையில் மூன்றாவது சாப்ட்வேரை பயன்படுத்திஉள்ளனர்.
விசாரணையில், ஜி.எஸ்.டி., இல்லாமல், ரசீது வழங்காமல் திருட்டுத்தனமாக, தங்கம் விற்பனை செய்தது தெரியவந்தது. இப்படி, 2,969 கிலோ விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் வரி மதிப்பீடு, 1,705.64 கோடி ரூபாய். வரி ஏய்ப்பு, 51.17 கோடி ரூபாய். இதையடுத்து, நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.