Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூக்கள் மணம் பரப்பும் அரசு பள்ளி வளாகம்! மாணவர்கள் பெயரில் செடிகள் நடவு

பூக்கள் மணம் பரப்பும் அரசு பள்ளி வளாகம்! மாணவர்கள் பெயரில் செடிகள் நடவு

பூக்கள் மணம் பரப்பும் அரசு பள்ளி வளாகம்! மாணவர்கள் பெயரில் செடிகள் நடவு

பூக்கள் மணம் பரப்பும் அரசு பள்ளி வளாகம்! மாணவர்கள் பெயரில் செடிகள் நடவு

ADDED : மார் 21, 2025 10:16 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பூக்களின் வாசமும், இயற்கையும் அவரணைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பள்ளியாக சந்தேகவுண்டன்பாளையம் பள்ளி வளாகம் மாறியுள்ளது.

பொள்ளாச்சி அருகே, சந்தேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர் சேர்க்கை விழா, பள்ளி ஆண்டு விழா, பூஞ்செடிகள் கண்காட்சி என, முப்பெரும் விழா நடந்தது.

தலைமையாசிரியர் அமுதாராணி தலைமை வகித்தார். பள்ளியில், காய்கறி, மூலிகை, கீரை, செவ்வந்தி, ரோஜாப்பூ, செம்பருத்தி தோட்டம் ஆகிய பிரிவுகளில் கண்காட்சி நடைபெற்றது.

புதிததாக பள்ளியில் சேரும் மாணவரின் பெயரில் ஒரு செடி நடுவது, ஒவ்வொரு மாணவனின் பிறந்தநாளுக்கும் ஒரு செடி நடுவது என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் அனைவரின் பெயரிலும் தொட்டியோடு கூடிய செடிகள் நடப்பட்டதால், அனைவரும் உற்சாகமாகமடைந்தனர்.

தலைமையாசிரியர் பேசியதாவது:

பள்ளி வளாகத்துக்குள் வருவோரை வரவேற்கும் வகையில், செடிகள் மலர்ச்சியோடு காணப்படுகிறது. மாணவர்கள் இயற்கையின் ரசனையோடு பள்ளிக்குள் நுழையும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

'எங்கள் பள்ளி, கனவு பள்ளி' என்ற கருத்தை மனதில் மனதில் கொண்டு, மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்து கையாளுகின்றனர். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்கும் வகையில் பள்ளி வளாகம் மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு, பேசினார்.

மாணவர்கள் பேசியதாவது:

இயற்கையை நாம் சுத்தமாக வைக்க வேண்டும். தரமான காய்கறிகளை உண்ண வேண்டும். பூமியை பாதுகாக்க வேண்டும் என்று புத்தகத்தில் உள்ளதை படிப்பதோடு நிறுத்தாமல், அதனை செயல்படுத்தும் வகையில் பள்ளி வளாகம் மாறியுள்ளது.

படிக்கும் பள்ளியை, கனவுப்பள்ளியாக மாற்றியுள்ளோம். பொதுமக்கள் தினந்தோறும் கூட்டம், கூட்டமாக பள்ளிக்கு வந்து தோட்டங்களை ரசித்து புகைப்படம் எடுக்கின்றனர். சந்தேகவுண்டன்பாளையம் என்றாலே பள்ளி தான் நினைவுக்கு வரும்.

இவ்வாறு, பேசினர். பள்ளி ஆசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us