/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்வு 15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்வு
15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்வு
15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்வு
15 மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்வு
ADDED : செப் 01, 2025 12:44 AM
கோவை; கடந்த மாதத்தில், நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உட்பட 15 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் சார்பில், ஒவ்வொரு மாதமும், சென்னை தவிர, மற்ற 37 மாவட்டங்களில், கண்காணிப்பு கிணறுகளில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலையில், கோவை, தஞ்சாவூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.
கடந்த மாதத்தில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.
கடந்தாண்டு, இதே காலகட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திருச்சி, பெரம்பூர், அரியலுார், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.