/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.பி.ஜி., செவிலியர் கல்லுாரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பி.பி.ஜி., செவிலியர் கல்லுாரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
பி.பி.ஜி., செவிலியர் கல்லுாரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
பி.பி.ஜி., செவிலியர் கல்லுாரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
பி.பி.ஜி., செவிலியர் கல்லுாரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
ADDED : செப் 26, 2025 06:30 AM

கோவை; பி.பி.ஜி., செவிலியர் கல்லுாரியில், புதிதாகச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அஷ்வின் மருத்துவமனை டாக்டர் அசோக்குமார், செவிலியர் படிப்பின் முக்கியத்துவம், வேலைவாய்ப்பு குறித்து பேசினார். கல்லுாரியின் மூத்த மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
கல்லுாரியின் தலைவர் தங்கவேலு பேசுகையில், ''தன்னலம் அற்ற செவிலியர் பணியை, சேவை மனப்பான்மையுடன் மாணவர்கள் செய்யவேண்டும். உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் உள்ளதால், திறன்களை வளர்த்து, வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
பி.பி.ஜி., குழும தாளாளர் சாந்தி, துணை தலைவர் அக்சய், பி.பி.ஜி., குழும செயல் இயக்குனர் அமுதகுமார், கல்லுாரி முதல்வர் லிங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.