Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஹரிபவனம் உணவகம் மட்டுமல்ல கோவையின் அடையாளமும்தான்

ஹரிபவனம் உணவகம் மட்டுமல்ல கோவையின் அடையாளமும்தான்

ஹரிபவனம் உணவகம் மட்டுமல்ல கோவையின் அடையாளமும்தான்

ஹரிபவனம் உணவகம் மட்டுமல்ல கோவையின் அடையாளமும்தான்

ADDED : அக் 11, 2025 09:02 PM


Google News
கோவையில் உயர்தர அசைவ உணவின் அடையாளம் எது என கேட்டால், ஊரே சொல்லும் ஒரே பெயர் ஹரிபவனம்.

1970ல் காந்திபுரம் 4வது வீதியில் ஹரிபவனம் எனும் தங்கும் விடுதியை, நிர்வாகம் செய்து வந்த ராஜு, விடுதியில் தங்கிய விருந்தினர்களுக்காக தனது மனைவி சரஸ்வதி சமைத்துக் கொடுக்க, சிறிய மெஸ் துவங்கினார். படிப்படியாக வளர்ந்து கோவையின் உணவக அரங்கில் தனக்கென தனி முத்திரை பதித்தது.

ஹரிபவனம் குழுமத்தின் புதிய கபே 5,000 சதுடியில் சிட்ரா பகுதியில் 'டெர்மினல் 2' திறக்கப்பட்டுள்ளது. விமான நிலைய முனைய கட்டடம் போல வடிவமைக்கப்பட்ட இது, கோவையின் முதல் 24 மணி நேர கபே என்பது தனி சிறப்பு.

புரதச்சத்து பானங்கள், ஏ.பி.சி. ஜூஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அசைவ உணவுகளை விரும்புவோருக்கு, காலை 7 மணி முதல் மீன் குழம்பு, குடல் குழம்பு, மட்டன் குழம்பு, நாட்டுக்கோழி குழம்புடன் இட்லி, பூரி உடன் கொத்து கறி, இதுபோன்ற உணவுகள் கிடைக்கும்.

அதேநேரத்தில் பப்ஸ், கேக் வகைகள், டோனட்ஸ், பர்கர்கள், சேண்ட்விச், பாஸ்தா, ராமென், சிஸ்லர் மற்றும் சாலட், கருவாடுடன் பழைய சோறு, அரிசி பருப்பு சாதம் மற்றும் பிரியாணி போன்ற உள்ளூர் சிறப்பு உணவுகளும் வழங்கப் படுகின்றன.

கோவை மக்களின் மனதுக்கு நெருக்கமான உணவகமாக நிலைத்து வரும் ஹரிபவனம், தனது சுவையான 55வது ஆண்டை நெருங்குகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us