Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து; வெற்றிகளை குவித்த சி.ஐ.டி., அணி

ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து; வெற்றிகளை குவித்த சி.ஐ.டி., அணி

ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து; வெற்றிகளை குவித்த சி.ஐ.டி., அணி

ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து; வெற்றிகளை குவித்த சி.ஐ.டி., அணி

ADDED : அக் 02, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
கோவை; அண்ணா பல்கலை 9வது மண்டல ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து போட்டிகள், கோவை சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது.

மூன்று போட்டிகளிலும், 70க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஹாக்கி இறுதி போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லுாரி அணி, பார்க் இன்ஜினியரிங், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, சி.ஐ.டி., ஆகியன முதல் நான்கு இடங்களை பிடித்தன.

டென்னிஸ் போட்டியில், சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி அணி, ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணி, பி.எஸ்.ஜி., டெக்னாலஜி அண்டு அப்ளைடு ரிசர்ச் நிறுவனம் ஆகியன, முதல் நான்கு பரிசுகளை வென்றன.

பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், கே.பி.ஆர்., இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி அணி, பி.எஸ்.ஜி., டெக்னாலஜி அண்டு அப்ளைடு ரிசர்ச் நிறுவனம், சி.ஐ.டி., ஆகியன முதல் நான்கு இடங்களை வென்றன.

மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில், கே.பி.ஆர்., இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, சி.ஐ.டி., கல்லுாரி ஆகியன, முதல் நான்கு இடங்களை வென்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி பரிசு வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் மணிகண்டன் உடனிருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us