/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாறைக்கு வைத்த வெடியால் அதிர்ந்த வீடு: மக்கள் அதிருப்தி பாறைக்கு வைத்த வெடியால் அதிர்ந்த வீடு: மக்கள் அதிருப்தி
பாறைக்கு வைத்த வெடியால் அதிர்ந்த வீடு: மக்கள் அதிருப்தி
பாறைக்கு வைத்த வெடியால் அதிர்ந்த வீடு: மக்கள் அதிருப்தி
பாறைக்கு வைத்த வெடியால் அதிர்ந்த வீடு: மக்கள் அதிருப்தி
ADDED : செப் 24, 2025 11:24 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில் பாறைக்கு வைத்த வெடியால், அருகில் இருந்த வீடு அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில், 6 கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதில், மயில்சாமி என்பவருக்கு சொந்தமான குவாரி, 25 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை.
இந்த குவாரியை மூட, இதன் அருகே இருந்த பெரிய பாறைக்கு நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வெடி வைத்து தகர்த்து, குவாரியில் கொட்டி சமன் செய்யப்பட்டது. அப்போது, அதிக அளவு சத்தமும், அதிர்வும் ஏற்பட்டது.
இதில், குவாரி அருகே இருந்த முருகேசன் என்பவரது வீட்டின் உட்புற கதவு அருகே கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்தது. இதனால், வீட்டின் உரிமையாளர் அதிருப்தி அடைந்தார்.
இதுகுறித்து முருகேசன் கூறியதாவது:
இங்குள்ள செயல்படாத குவாரி அருகே உள்ள பாறைக்கு வெடி வைப்பது குறித்து, கனிம வளத்துறை அலுவலகத்தில் மனு அளித்தேன். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோன்று ஒரு மாதத்திற்கு முன் குவாரியில், வெடி வைத்தில் சிதறிய கற்கள் வீட்டின் மேற்கூரையில் விழுந்து ஓடுகள் சேதமடைந்தது.
அப்போதும் அதிகாரியிடம் தெரிவித்தோம். நேரில் பார்வையிட்ட அதிகாரிகள் இனி இது போன்று நடக்காது என தெரிவித்தனர். ஆனால், தற்போது மீண்டும் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இவ்வாறு, கூறினார்.