/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பது எப்படி?ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பது எப்படி?
ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பது எப்படி?
ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பது எப்படி?
ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பது எப்படி?
ADDED : ஜன 27, 2024 11:29 PM

''கர்ப்பிணிகள் அன்றாட பணிகளை களிப்புடன் செய்தால், தாய்மை என்பது எளிதாகும்,'' என்கிறார், பி.எஸ்.ஜி., மருத்துவமனை கரு பாதுகாப்பு மைய கரு மருத்துவ நிபுணர் லலிதா நடராஜன்.
அவர் கூறியதாவது:
கர்ப்பிணிகள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, சிசுவுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு பிறவிக்குறைபாடு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவு, சுகாதாரமான சூழல் உள்ளிட்டவற்றுக்கும் இதில் பங்கு உள்ளது. அன்றாட பணிகளை களிப்புடன் செய்தால், தாய்மை என்பது எளிதாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாட்டை பொறுத்தே, அதன் காரணம் தெரியவரும். குணப்படுத்த முடியுமா என்பதை கண்டறிய முடியும்.
பொதுவாக நரம்பியல் தொடர்பான பிரச்னைகளுக்கு போலிக் ஆசிட் பற்றாக்குறை காரணம். இதற்கு குழந்தை பெற திட்டமிடும் முன்பே, சிகிச்சை பெற வேண்டும்.
சர்க்கரை, வலிப்பு நோய் உள்ளவர்களின் கருவிலுள்ள குழந்தைக்கு, நரம்பியல் பிரச்னை வர வாய்ப்புள்ளது. அதை தடுக்க, போலிக் ஆசிட் அதிகளவில் தேவைப்படும். இதை கருவுறும் முன்பே, உட்கொள்ள வேண்டும்.
ஸ்டிராய்டு மருந்துகளை உபயோகிக்கும் பெண்கள் கருவுரும் போது, அவர்களின் குழந்தைகளுக்கு அன்னப்பிளவு, அன்ன உதடு உள்ளிட்ட பிரச்னை ஏற்படலாம்.
இதுதவிர, மரபணு குறைபாடுகளாலும், பிரச்னை ஏற்படலாம். இதை முன்கூட்டியே கண்டறிந்து, தவிர்க்கலாம். செவித்திறன் குறைபாட்டுக்கு மரபணு மற்றும் வைரஸ் தாக்குதல் காரணமாக இருக்கலாம்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு உள்ள குறைபாடுகளுக்கு ரூபெல்லா போன்ற நோய் தாக்குதலும் ஒரு காரணம். இதற்கு தடுப்பூசிகள் உள்ளன. இளம் வயதிலேயே செலுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, 82200 13330, 0422 4345099 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.