/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'வழிப்பறி செய்யும் போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கினேன்' : கைதானவர் வாக்குமூலம் 'வழிப்பறி செய்யும் போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கினேன்' : கைதானவர் வாக்குமூலம்
'வழிப்பறி செய்யும் போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கினேன்' : கைதானவர் வாக்குமூலம்
'வழிப்பறி செய்யும் போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கினேன்' : கைதானவர் வாக்குமூலம்
'வழிப்பறி செய்யும் போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கினேன்' : கைதானவர் வாக்குமூலம்
ADDED : செப் 01, 2025 11:51 PM

சூலுார்: கோவை அருகே துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், 'வழிப்பறி செய்யும் போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கினேன்' என்று கைதானவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை சூலுாரில் இரு நாட்களுக்கு முன் நடந்த செயின் பறிப்பு வழக்கில், கரூர் மாவட்டம் மணல் மேட்டை சேர்ந்த குணசேகரன்,62, பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் சானி, 22 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் குணசேகரன் காவலாளியாகவும், விஜயகுமார் சானி கட்டட வேலைக்கு செல்வதும், இருவரும் ராசிபாளையத்தில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதும் தெரிந்தது. நகையை மீட்க, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த, துப்பாக்கி மற்றும் 18 தோட்டாக்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில் குணசேகரன் துப்பாக்கி வைத்திருந்தது தனக்கு தெரியாது என்று கைதான விஜயகுமார் சானி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குணசேகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 'பீகார் மாநிலம் பாகம்பர்பூரை சேர்ந்த விக்ரம் குமார், 25 என்ற நபர், பீகாரில் இருந்து வாங்கி வந்து, தன்னிடம் விற்பனை செய்தார். திருட்டு, வழிப்பறி செய்யும் போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கினேன்' என்று போலீசாரிடம் குணசேகரன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, குணசேகரனுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த விக்ரம் குமாரை சூலுார் அருகே போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் மூவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.