/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பறவைகள் கணக்கெடுக்க ஆர்வமிருந்தால் வரலாம் பறவைகள் கணக்கெடுக்க ஆர்வமிருந்தால் வரலாம்
பறவைகள் கணக்கெடுக்க ஆர்வமிருந்தால் வரலாம்
பறவைகள் கணக்கெடுக்க ஆர்வமிருந்தால் வரலாம்
பறவைகள் கணக்கெடுக்க ஆர்வமிருந்தால் வரலாம்
ADDED : அக் 11, 2025 10:28 PM
கோவில்பாளையம்:அக்ரஹார சாமக்குளத்தில் 160 ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது. அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பு மற்றும் கவுசிகா நீர்க்கரங்கள் சார்பில், ஐந்தாண்டுகளாக குளம் சீரமைத்தல் மற்றும் மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது. குளத்தில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணி இன்று (12ம் தேதி) காலை நடைபெற உள்ளது.
கோவை நேச்சர் சொசைட்டி, ஏரி பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து இப்பணியில் ஈடுபடுகிறது. நேச்சர் மற்றும் பட்டாம்பூச்சி சொசைட்டி சார்பில் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஜி 18 அமைப்பு சார்பில், பட்டாம் பூச்சிக்கான தாவரங்கள் நடவு செய்யும் பணி நடைபெறுகிறது.


