/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரண்டு இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை இரண்டு இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை
இரண்டு இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை
இரண்டு இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை
இரண்டு இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை
ADDED : செப் 24, 2025 11:09 PM
கோவை:சுகுணா நிறுவனத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை தலைமையிடமாக கொண்டு, 'சுகுணா புட்ஸ்' நிறுவனம் செயல்படுகிறது.
நேற்று முன்தினம், கோவையில் உள்ள இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ரேஸ்கோர்சில் உள்ள சுகுணா குழும அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டாம் நாளாக நேற்றும் இந்த நிறுவனத்தில் சோதனை தொடர்ந்தது.
நாமக்கல் நாமக்கல், எஸ்.ஜி., நகரை சேர்ந்தவர், 'வாங்கிலி' சுப்ரமணியம், 62, கோழிப்பண்ணை அதிபர் மற்றும் தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர்.
நேற்று முன்தினம் காலை, 10:00 மணி முதல், 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், இவருக்கு சொந்தமான வீடு, நிதி நிறுவனம், அலுவலகங்களில் சோதனை செய்தனர். இரண்டாம் நாளாக, நேற்றும் சோதனை தொடர்ந்தது.