Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெள்ளக்கோவில் கூடுதல் நீர் விவகாரம்; பாசன சபை தலைவர்கள் ஆலோசனை

வெள்ளக்கோவில் கூடுதல் நீர் விவகாரம்; பாசன சபை தலைவர்கள் ஆலோசனை

வெள்ளக்கோவில் கூடுதல் நீர் விவகாரம்; பாசன சபை தலைவர்கள் ஆலோசனை

வெள்ளக்கோவில் கூடுதல் நீர் விவகாரம்; பாசன சபை தலைவர்கள் ஆலோசனை

ADDED : செப் 26, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் பி.ஏ.பி. பாசன சபை தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பாசனத்தில், நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு நீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளக்கோவில் பி.ஏ.பி. விவசாயிகள், கூடுதல் நீர் வழங்க வேண்டும் என, அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், திருமூர்த்தி பாசன சபை தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.

சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், திட்டக்குழு தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தனர். செயற்பொறியாளர்கள் நரேந்திரன், பிரபாகரன், திட்டக்குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்கள் பங்கேற்றனர்.

திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது: வெள்ளக்கோவில் கால்வாயில் கூடுதல் நீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பாசன தலைவர், விவசாயிகள், திட்டக்குழுவுடன் பேச விருப்பம் தெரிவித்தனர்.

இதுபோன்று மற்ற அனைத்து தலைவர்களுக்கும் பிரச்னை உள்ளதால், பாசன சபை தலைவர்கள் அனைவரையும் அழைத்து பேச முடிவு செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப அப்பகுதிக்கு தனியாக நடத்தப்பட்டது. முதற்கட்டமாக, 133 பாசன சபை தலைவர்களுடான கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் பாசன சபை தலைவர்கள், 'வெள்ளக்கோவில் பாசனத்துக்கு தற்போது அதிகளவு தண்ணீர் வழங்கப்படுகிறது.

அங்கு விவசாயத்துக்கு பயன்படுத்துவதை விட, குட்டை போல நீரை தேக்கி வியாபாரம் செய்கின்றனர். இங்கு விவசாயத்துக்கு போதுமான நீர் இல்லை.

வெள்ளக்கோவிலுக்கு தண்ணீர் செல்லவில்லை என காரணம் கூறி, அவ்வப்போது மேல்மடை அடைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதுபோன்று செயல்களை மேற்கொள்ளாமல், அனைவருக்கும் வழங்குவது போல மேல் மடைக்கும், தொடர்ந்து,15 நாட்கள் நீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து, வெள்ளக்கோவில் பாசன விவசாயிகளுக்கான கூட்டம் நடத்தப்பட்டது. வெள்ளக்கோவில் விவசாயிகள், தற்போது கால்வாயில், 4 அடி 5 அங்குலம் நீர் வழங்குவதை, 4 அடி எட்டு அலங்குலமாக உயர்த்தி வழங்க வேண்டும்,' என வலியுறுத்தினர்.

இரு தரப்பு கருத்துக்களும் கேட்டறியப்பட்டன. தொடர்ந்து, திட்டக்குழு, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நீர் இழப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்

உடுமலை கால்வாய் பாசன தலைவர்கள் பேசுகையில், 'கால்வாய்கள் பராமரிப்பு இல்லை, பிரதான கால்வாயில் நீர் திருட்டு போன்ற பிரச்னைகளால், நீர் இழப்பு கடுமையாக ஏற்படுகிறது. பல்லடம், பொங்கலுார், காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் போது ஏற்படும் நீர் இழப்பை, உடுமலை கால்வாயில் உள்ள விவசாயிகள் நாங்கள் எதற்கு ஏற்க வேண்டும். உடுமலை கால்வாய்க்கும், பரம்பிக்குளம் பிரதான கால்வாய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இப்போது, அனைத்து விவசாயிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், நீர் இழப்பை ஏற்றுக்கொள்கிறோம். இனி வரும் காலங்களில் நீர் இழப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்,' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us