/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'அமைச்சர்களுக்கு இனி, ஜெயில்தான்!''அமைச்சர்களுக்கு இனி, ஜெயில்தான்!'
'அமைச்சர்களுக்கு இனி, ஜெயில்தான்!'
'அமைச்சர்களுக்கு இனி, ஜெயில்தான்!'
'அமைச்சர்களுக்கு இனி, ஜெயில்தான்!'
ADDED : பிப் 02, 2024 12:05 AM

கோவை;தி.மு.க., எம்.எல்.ஏ., மகன் வீட்டில் பட்டியலின பெண் தாக்கப்பட்டதை கண்டித்து, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மேயர் வேலுசாமி முன்னிலை வகித்தார்.
சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., ஜெயராம் பேசுகையில், ''தமிழக அரசு, விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்திய நிலங்களை ஒப்படைக்கவில்லை; அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றவில்லை. இனி, தி.மு.க., அமைச்சர்களை புழல் சிறையில் தான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்,'' என்றார்.
எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகளுக்கே போலீசார் பாதுகாப்பு தருகின்றனர். புகார் கொடுப்போரை கைது செய்கின்றனர்' என்றார். எம்.ஜி.ஆர்., பற்றி பேசுவதற்கு ஆ.ராசாவுக்கு தகுதியில்லை. வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி போராட்டம் நடத்துவோம். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் அடி கொடுப்பார்கள்' என்றார். கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேஸ்வரி, சின்னசாமி, மாணவரணி செயலாளர் சந்திரசேகர், கவுன்சிலர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


