ADDED : அக் 16, 2025 11:08 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், ஜாக்டோ -- ஜியோ கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
அனைத்து நிலை பணியாளர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


