/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஜூபிலன்ட் தமிழ்நாடு கண்காட்சி துவக்கம்ஜூபிலன்ட் தமிழ்நாடு கண்காட்சி துவக்கம்
ஜூபிலன்ட் தமிழ்நாடு கண்காட்சி துவக்கம்
ஜூபிலன்ட் தமிழ்நாடு கண்காட்சி துவக்கம்
ஜூபிலன்ட் தமிழ்நாடு கண்காட்சி துவக்கம்
ADDED : பிப் 02, 2024 12:04 AM

கோவை;ஜூபிலன்ட் கோயம்புத்தூர் அறக்கட்டளை சார்பில் 'ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச எக்ஸ்போ & உச்சி மாநாடு 2024 கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. பிப்.,1 முதல் 3 வரை நடக்கும் மாநாட்டில் கண்காட்சி, கருத்தரங்குகள் நடக்கின்றன.
நிகழ்வில், தமிழக அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, பேமி டிஎன் ஆகியவையும் பங்கேற்கின்றன. துவக்க விழாவில், தமிழ்நாட்டின் மிஷன் ஸ்டார்ட் அப் தலைமை நிர்வாக இயக்குனர் சிவராஜா, கிஸ்பிளேவின் தலைமை இயக்குனர் சுரேஷ் சம்பந்தம், கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் ஜவுளி, உணவு, கட்டுமானம், இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம் என சர்வதேச அளவில் உற்பத்தியாளர்கள் பங்கேற்றுள்ளனர். பொருட்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
கண்காட்சியின்போது நடக்கும் கருத்தரங்கில், முதலீடு, கூட்டாண்மை, புது வியாபார தொடர்புகள் உருவாக்கிக் கொள்ளுதல் உள்ளிட்ட பல வாய்ப்புகள் பற்றி அறிய முடியும்.
சர்வதேச அளவிலிருந்து இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்பவியலாளர், ஆராய்ச்சியாளர் என, 20 பேர் பங்கேற்றுள்ளனர். 22 நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர். காலை 10.00 மணி முதல் கண்காட்சி துவங்குகிறது. 450 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.


