/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கலைத் திருவிழாவில் கலக்கிய மாணவியர்: டெனிகாய்ட் போட்டியிலும் கனஜோர்கலைத் திருவிழாவில் கலக்கிய மாணவியர்: டெனிகாய்ட் போட்டியிலும் கனஜோர்
கலைத் திருவிழாவில் கலக்கிய மாணவியர்: டெனிகாய்ட் போட்டியிலும் கனஜோர்
கலைத் திருவிழாவில் கலக்கிய மாணவியர்: டெனிகாய்ட் போட்டியிலும் கனஜோர்
கலைத் திருவிழாவில் கலக்கிய மாணவியர்: டெனிகாய்ட் போட்டியிலும் கனஜோர்
ADDED : பிப் 10, 2024 11:00 PM
மாநகராட்சி பள்ளி மாணவியர், மாநில அளவிலான கலைத்திருவிழா மற்றும் டெனிகாய்ட் போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டியில், முதல் பரிசுகளை வென்றுள்ளனர்.
இதில், ஆர்.எஸ்.புரம்(மேற்கு) பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 9, 10ம் வகுப்பு பயிலும் ஸ்ருதி, கிரிஷ்மா, தக் ஷதா, தருணிகா, அனுஷ்கா, துர்கா நிவாஷினி, நந்தினி, அனுகிருத்திகா, ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீராம்(மிருதங்கம்) ஆகியோர், இசை போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 9, 10ம் வகுப்பு பயிலும் அன்னபூரணி, ஜனனி, காவ்யா, ஸ்ரீநிதி, பிரீத்திகா, ஸ்ரீ தர்ஷினி, தார்ஷிகா, சோனிகா, துர்கா ஆகியோர் குழு நடனத்திலும் அசத்தியுள்ளனர்.
ஆர்.எஸ்.புரம்(மேற்கு) மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கெஸ்னா, காவியா ஆகியோர் மாநில அளவில் நடந்த, டெனிகாய்ட் இரட்டையர் பிரிவு போட்டியில், மூன்றாம் இடம் பிடித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.