/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா
சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா
சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா
சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா
ADDED : அக் 20, 2025 09:51 PM
அன்னுார்: சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை (22ம் தேதி) துவங்குகிறது.
சித்தர்கள் வழிபாடு செய்த, பழமையான சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில், கந்த சஷ்டி திருவிழா நாளை (22ம் தேதி) துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனமும், 9:15 மணிக்கு காப்பு கட்டுதலும், வேள்வி பூஜையும் நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு மூலமந்திர அர்ச்சனை நடைபெறுகிறது.
தொடர்ந்து 27ம் தேதி வரை தினமும் வேள்வி பூஜை, மூல மந்திர அர்ச்சனை நடக்கிறது. வரும் 28ம் தேதி மதியம் 12:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், பேரொளி வழிபாடும் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.
விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


