/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
ADDED : அக் 04, 2025 11:43 PM

கோவை: கொங்குநாடு மருத்துவமனை, கடந்த மே 17 உலக ரத்தக்கொதிப்பு தினம் முதல் 75 நாட்களுக்குள் ஒரு லட்சம் நபர்களுக்கு, ரத்தக்கொதிப்பு பரிசோதனை இலவசமாக செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஒரு லட்சம் நபர்கள், 10 மடங்கு பொதுமக்களுக்கு பரப்பி, 10 லட்சம் நபர்களுக்கு மேல் ரத்தக்கொதிப்பு பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதை நோபல் உலக சாதனையாக பாராட்டி, வ.உ.சி. மைதானத்தில் நோபல் உலக சாதனை தலைமை செயல் அதிகாரி அரவிந்த் லட்சுமி நாராயணன், தொழில்நுட்ப இயக்குனர் லாவண்யா கொங்குநாடு மருத்துவமனைக்கு, சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
இதில், கொங்குநாடு மருத்துவமனை இருதய சிகிச்சை பிரிவு தலைவரான டாக்டர் பாலாஜி சுந்தரேசன், இருதய அறுவை சிகிச்சை துறை தலைவரான டாக்டர் மோகன கிருஷ்ணன் ரத்தக்கொதிப்பின் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயகுமார், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெகதீஸ்வரி, சீனியர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில் குமார், தலைமை மயக்கவியல் மருத்துவர் டாக்டர் கணேஷ் பாபு, மயக்கவியல் மருத்துவர் டாக்டர் சபரி கிரி வாசன் மற்றும் செவிலியர்கள், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


