/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வார்டுக்கு ஒரு நுாலகம் அமைக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கைவார்டுக்கு ஒரு நுாலகம் அமைக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை
வார்டுக்கு ஒரு நுாலகம் அமைக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை
வார்டுக்கு ஒரு நுாலகம் அமைக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை
வார்டுக்கு ஒரு நுாலகம் அமைக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை
ADDED : பிப் 24, 2024 10:16 PM
கோவை:கோவை மாநகராட்சிக்கான, 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தனர். துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர்கள் செல்வசுரபி, சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சில் குழு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:
சாலையை மேம்படுத்த அரசு நிதி எதிர்பார்க்காமல், மாநகராட்சியே பொது நிதி ஒதுக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன் பதித்த பாதாள சாக்கடை குழாய்களை புதுப்பிக்க வேண்டும். முக்கியமான இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒரே வண்ணத்தில் வர்ணம் பூச வேண்டும். கூடுதல் வகுப்பறை, கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும்.
மாநகராட்சி பள்ளிகளில் ஏற்கனவே அமைத்துள்ள, சோலார் பேனல்களை பராமரிக்க வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் மானியம் பெற்று, காலியாக உள்ள இடங்களில் சோலார் பேனல் அமைக்க வேண்டும்.
ஏற்கனவே அறிவித்த திட்டச்சாலைகள் உருவாக்க முனைப்பு காட்ட வேண்டும். பூங்காக்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். பழுதடைந்த உபகரணங்களை அகற்றி விட்டு, புதிதாக அமைக்க வேண்டும். வார்டு நிதியை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
வார்டுக்கு ஒரு நுாலகம் கட்ட வேண்டும். மாநகராட்சி சார்பில் அழகு நிலையம் கட்ட வேண்டும். சொத்து வரி உயர்வில், 50 சதவீதம், குப்பை கட்டணத்தில், 50 சதவீதத்தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.