/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவில் உண்டியலை உடைத்து போதையில் தூங்கியவர் கைது கோவில் உண்டியலை உடைத்து போதையில் தூங்கியவர் கைது
கோவில் உண்டியலை உடைத்து போதையில் தூங்கியவர் கைது
கோவில் உண்டியலை உடைத்து போதையில் தூங்கியவர் கைது
கோவில் உண்டியலை உடைத்து போதையில் தூங்கியவர் கைது
ADDED : ஜூன் 19, 2025 05:51 AM
போத்தனுார் | ; கோவைபுதுாரில் பாலவிநாயகர், முருகன், அய்யப்பன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை கோவில் பூசாரி உன்னி, கோவிலை திறக்கச் சென்றார்.
கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதையும், அருகே மதுபாட்டிலுடன் ஒருவர் தூங்குவதையும் கண்டார். கருவறைக்குள் இருந்த ரூ.6,250 திருட்டு போயிருந்தது.
கோவில் நிர்வாகியுடன் சேர்ந்து, தூங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பினார். போதையில் இருந்து விழித்து எழுந்த அந்த நபரை, குனியமுத்துார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் காரைக்காலை சேர்ந்த சின்னையன், 42 என்பதும், கட்டுமான பணிக்காக கோவையில் தங்கியிருப்பதும், உண்டியலை உடைத்து திருடி விட்டு, போதையில் உறங்கியதும் தெரிந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர்.