ADDED : செப் 03, 2025 11:26 PM
அன்னுார்; பாசக் குட்டை, பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே, பார்த்திபன் 26. என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை ஒட்டி உள்ள பகுதியில், கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.ஐ. அழகேசன் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதில் ஐந்து அடி உயரமுள்ள ஒரு கஞ்சா செடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் வீட்டில் வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவும் பிடிபட்டது. பார்த்திபனை அன்னுார் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.