/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கரூரில் சிக்கியவருக்கு கோவையில் சிகிச்சை கரூரில் சிக்கியவருக்கு கோவையில் சிகிச்சை
கரூரில் சிக்கியவருக்கு கோவையில் சிகிச்சை
கரூரில் சிக்கியவருக்கு கோவையில் சிகிச்சை
கரூரில் சிக்கியவருக்கு கோவையில் சிகிச்சை
ADDED : செப் 30, 2025 07:57 AM
கோவை; கரூர் த.வெ.க. பிரசாரத்தில் பாதிக்கப்பட்ட மனோஜ்குமார் என்பவர், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை, தமிழக அமைச்சர் மதிவேந்தன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''மனோஜ்குமாருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.
24 மணி நேரத்துக்கு பின் தானாக சுவாசிக்கும் அளவில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
தொடர்ந்து, 24 மணி நேர சிகிச்சைக்கு பின், நாளை (இன்று) வீடு திரும்புவார் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
அவருக்கு தேவையான உதவிகளை செய்ய, மருத்துவ நிர்வாகத்திடம் கூறியுள்ளேன்,'' என்றார்.
தி.மு.க. பகுதி கழக செயராளர் நடராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


