/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கணும்' 'பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கணும்'
'பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கணும்'
'பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கணும்'
'பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கணும்'
ADDED : மார் 18, 2025 05:39 AM

கோவை : பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் மனோஜ் யாதவா அறிவுறுத்தினார்.
ரயில்வே பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரலாக இருப்பவர் மனோஜ் யாதவா. நேற்று கோவை வந்த மனோஜ் யாதவா, ரயில்வே ஸ்டேஷனின் பல்வேறு பகுதிகளிலும், ஆய்வு மேற்கொண்டார்.
ரயில்வே ஸ்டேஷன் வரைபடத்தை பார்வையிட்டவர், ரயில்வே ஸ்டேஷன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிப்பு கேமரா, தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.
பின், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வு பணிகளை முடித்த பின், ஊட்டி புறப்பட்டு சென்றார். சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்கா மற்றும் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷ்னர் சவ்ரவ்குமார் உள்ளிட்டோர், ஆய்வின் போது உடனிருந்தனர்.