ADDED : மே 27, 2025 07:40 AM
போத்தனுார் : பிச்சனுார் பஞ்.,க்குட்பட்ட நவக்கரை, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பழனிரங்கன். இரு நாட்களுக்கு முன் பெய்த மழையில் வீட்டின் முன் சுவர், மேற்கூரை (கான்கிரீட்) ஆகியவை இடிந்து விழுந்தன. பழனிரங்கன், மனைவி ராஜம்மாள் சிறு காயத்துடன் தப்பினர்.
இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும், 48 குடும்பத்தினர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கான உணவை வழங்க நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், நேற்று மாலை அமைச்சர் முத்துசாமி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து, ஆறுதல் கூறினார். பெட்ஷீட், அரிசி, பருப்பு வழங்கினார்.
அப்போது பழனிரங்கன் வீடு உள்பட இரு வீடுகளை சீரமைக்க, தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. அத்துடன் இதர வீடுகளையும் விரைவில் சீரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.