Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.2.5 கோடியில் நவீன சி.டி. ஸ்கேன் வசதி; அரசு மருத்துவமனையில் பணிகள் தீவிரம்

ரூ.2.5 கோடியில் நவீன சி.டி. ஸ்கேன் வசதி; அரசு மருத்துவமனையில் பணிகள் தீவிரம்

ரூ.2.5 கோடியில் நவீன சி.டி. ஸ்கேன் வசதி; அரசு மருத்துவமனையில் பணிகள் தீவிரம்

ரூ.2.5 கோடியில் நவீன சி.டி. ஸ்கேன் வசதி; அரசு மருத்துவமனையில் பணிகள் தீவிரம்

ADDED : அக் 10, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நவீன தொழில்நுட்ப வசதியுடன் புதிய 'சி.டி. ஸ்கேன்' அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், அரசு மருத்துவமனையில் பயன்பெற்று வருகின்றனர்.தினமும், 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள், வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகின்றனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நோயை துல்லியமாக கண்டறிய, சி.டி., ஸ்கேன் வசதி கடந்த, 2014ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. விபத்து காயம், எலும்பு முறிவு, மென்மையான திசுக்கள், தசைகள், ரத்த குழாய், நுரையீரல் உள்ளிட்ட மார்பு உறுப்புகள், வயிறு, இடுப்பு பகுதி போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறதா என துல்லியமாக காண முடியும் என கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனையில், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி ஸ்கேன் செய்து பார்க்கலாம். இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகின்றனர்.

தனியார் மையங்களில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளதால், ஏழை, நடுத்தர மக்கள், அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

இந்நிலையில், 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சி.டி. ஸ்கேன் இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் டாக்டர்கள் கூறியதாவது:

விபத்தில் ஏற்படும் காயங்கள், குடல், நுரையீரல் பாதிப்பு, வயிற்று பாதிப்பு, தலை காயங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை கண்டறிய சி.டி. ஸ்கேன் வசதி உள்ளது. மாதத்துக்கு, 6,000 பேர் வரை ஸ்கேன் செய்கின்றனர்.

தற்போது, புதியதாக துல்லியமாக கண்டறிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சி.டி. ஸ்கேன் பொருத்தும் பணிகள் மருத்துவமனை புதிய கட்டடத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

புதிய ஸ்கேன் இயந்திரத்தில், தெளிவாக இருக்கும். ஸ்கேன் எடுக்கும் நேரம் குறையும். உள் காது பகுதி வரை துல்லியமாக பார்க்க முடியும்.

இதில், இதயம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும், 'ஏஞ்சியோ' செய்யலாம். மருந்து செலுத்தி எடுக்கும் வசதி உள்ளது.உடல் எடைக்கேற்ப கதிர்வீச்சு குறையும். வெளியில் சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டுமென்றால், 3,000 ரூபாய்க்கு மேல் செலவாகும். மருந்து செலுத்தி ஸ்கேன் எடுக்க, 6,000 ரூபாய் வரை செலவாகும். இங்கு, 1,200 ரூபாய் செலுத்தினால் போதும்.

ஏஞ்சியோ செய்ய, வெளியில் அதிக தொகை செலவாகும். ஆனால் இங்கு, 3,000 ரூபாய் செலுத்தினால் போதும். மேலும், ஒவ்வொரு பகுதி ஸ்கேன் செய்ய, 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

காப்பீடு திட்டம் இருந்தால் ஸ்கேன் செய்ய பணம் பெறுவதில்லை. மருத்துவ கல்லுாரிகளில் மட்டும் இருந்த இயந்திரம் தற்போது இங்கு பொருத்தப்படுகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இவ்வாறு, கூறினர்.

24 மணி நேரமும் செயல்படணும்!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், சி.டி. ஸ்கேன் காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே இயங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு மேல் வரும் விபத்து காயங்கள் உள்ளிட்டவை ஸ்கேன் செய்ய கோவைக்கு அனுப்பும் நிலை உள்ளது. அதற்கு மாற்றாக, 24 மணி நேரமும் சி.டி.ஸ்கேன் எடுக்கும் வகையில், டாக்டர், ஊழியர்களை பணி அமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருத்துவ பயனாளர்கள் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us