Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இயற்கை பொருள் தயாரிப்புகள் கண்காட்சி

 இயற்கை பொருள் தயாரிப்புகள் கண்காட்சி

 இயற்கை பொருள் தயாரிப்புகள் கண்காட்சி

 இயற்கை பொருள் தயாரிப்புகள் கண்காட்சி

ADDED : டிச 04, 2025 07:03 AM


Google News
கோவை: கோவை வேளாண் பல்கலையில், உணவு மற்றும் இயற்கை தயாரிப்புகள் கண்காட்சி இரண்டு நாட்களுக்கு நடக்கிறது.

தாவர உயிரி தொழில்நுட்பத்துறை, காக்ஸ்பிட், இ-யுவா சார்பில் வரும் 20, 21ம் தேதி கண்காட்சி நடக்கிறது. உணவு, இயற்கை தயாரிப்புகள் துறையில் நிகழும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சேவைகள், வாய்ப்புகளை ஒரே தளத்தில் வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர், புத்தாக்குநர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உட்பட துறைசார்ந்த பங்குதாரர்கள் பங்கேற்கின்றனர். சிறந்த உணவு மற்றும் தொழில் ஆலோசனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அனுமதி இலவசம். விவரங்களுக்கு 80565 06214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us