/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூடுதல் ஆதார், இ--சேவை மையங்கள் வேண்டும் கூடுதல் ஆதார், இ--சேவை மையங்கள் வேண்டும்
கூடுதல் ஆதார், இ--சேவை மையங்கள் வேண்டும்
கூடுதல் ஆதார், இ--சேவை மையங்கள் வேண்டும்
கூடுதல் ஆதார், இ--சேவை மையங்கள் வேண்டும்
ADDED : செப் 23, 2025 09:12 PM
கருமத்தம்பட்டி ;'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மக்கள் கூட்டம் அதிகம் வருவதால், கூடுதலாக ஆதார் மற்றும் இ-சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், நடத்தப்படுகிறது. பல்வேறு கோரிக்கை மனுக்களை அளிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். அதிலும் குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் மனுக்களை அளிக்கின்றனர்.
இந்நிலையில், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க கூட்டம் அதிகம் இருப்பது போல், ஆதார் மையங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் பல்வேறு சேவைகளை பெற கூட்டம் அதிகம் வருகிறது. கைக்குழந்தைகளுடன் பல பெண்கள் காத்திருக்கின்றனர். ஆதாரில் திருத்தம் செய்தல், குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தல் உள்ளிட்ட பல சேவைகளை பெறவும், இ-சேவை மையங்களுக்கு, பட்டா மாறுதல், வாரிசு சான்று, ஜாதி சான்று உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க ஏராளமானோர் வருகின்றனர்.
ஆனால் மையங்களில், தலா இரு பணியாளர்கள் மட்டுமே இருப்பதால், சேவைகளை பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற் படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'முகாம்களில் பல சேவைகளை பெற, ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். ஆதார் மற்றும் இ - சேவைகளை பெறவும் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
ஒரே ஒரு மையம் மட்டுமே இருப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கூடுதல் பணியாளர்களை நியமித்து சேவைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.