/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு புதிய கம்ப்யூட்டர் பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு புதிய கம்ப்யூட்டர்
பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு புதிய கம்ப்யூட்டர்
பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு புதிய கம்ப்யூட்டர்
பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு புதிய கம்ப்யூட்டர்
ADDED : மே 27, 2025 09:45 PM

பெ.நா.பாளையம்; கவுண்டம்பாளையத்தில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு புதிய கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் வளாகத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே மாற்று திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையம் செயல்படுகிறது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் செயல்படும் பெரிநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வசிக்கும் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மாற்று திறன் குழந்தைகளுக்கு இங்கு கல்வி, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த மையத்துக்கு புதிய கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மையத்தின் பிசியோதெரபிஸ்ட் மதனகோபால் வரவேற்றார். ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் பாபு, ரோட்டரி மெரிடியன் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சேவைகள் குறித்து விளக்கினார்.
ரோட்டரி துணை கவர்னர்கள் சுப்பிரமணியம், ராமசாமி ஆகியோர், மெரிடியன் அமைப்பு உறுப்பினராக இருந்த ஸ்ரீதர் நினைவாக அவரது சகோதரி லட்சுமி பழனியப்பன் சார்பில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய கம்ப்யூட்டரை மாற்றுத்திறன் குழந்தைகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பெரியசாமி, வெங்கடேஷ், வடிவேலு, சிறப்பு கல்வி ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.