/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சேதமடைந்த சாலைகளை சீக்கிரம் சீரமைக்க உத்தரவு சேதமடைந்த சாலைகளை சீக்கிரம் சீரமைக்க உத்தரவு
சேதமடைந்த சாலைகளை சீக்கிரம் சீரமைக்க உத்தரவு
சேதமடைந்த சாலைகளை சீக்கிரம் சீரமைக்க உத்தரவு
சேதமடைந்த சாலைகளை சீக்கிரம் சீரமைக்க உத்தரவு
ADDED : செப் 01, 2025 10:42 PM
கோவை; மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை, விரைந்து சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுகின்றன. கிருஷ்ணாம்பதி குளம் அருகே, கவுண்டம்பாளையம்-இடையர்பாளையம் சாலை, ஜி.என். மில்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில், திட்ட பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
குடிநீர் வடிகால் வாரியம், தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். சாய்பாபாகாலனி அருகே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.52 கோடி மதிப்பீட்டில், 1.2 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதையும் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டார்.