/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கார் மோதி விபத்து; பாதசாரி படுகாயம் கார் மோதி விபத்து; பாதசாரி படுகாயம்
கார் மோதி விபத்து; பாதசாரி படுகாயம்
கார் மோதி விபத்து; பாதசாரி படுகாயம்
கார் மோதி விபத்து; பாதசாரி படுகாயம்
ADDED : அக் 20, 2025 10:10 PM
நெகமம்: நெகமம் அருகே உள்ள, செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் போடிசாமி, 65. இவர், பொள்ளாச்சி ----- பல்லடம் ரோட்டில் தண்ணீர் பந்தல் பகுதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், போடிசாமி படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தோர், அவரை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுநரை தேடுகின்றனர்.


