/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவிடம் திருப்பூர் தொழில்துறையினர் மனுதி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவிடம் திருப்பூர் தொழில்துறையினர் மனு
தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவிடம் திருப்பூர் தொழில்துறையினர் மனு
தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவிடம் திருப்பூர் தொழில்துறையினர் மனு
தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவிடம் திருப்பூர் தொழில்துறையினர் மனு
ADDED : பிப் 11, 2024 01:41 AM

திருப்பூர்:'லோக்சபா தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது' என்று, தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசினார்.
லோக்சபா தேர்தலையொட்டி, தி.மு.க., சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்க, எம்.பி., கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு நேற்று திருப்பூரில், கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய கட்சி மாவட்டங்களைச் சேர்ந்த, தொழில் அமைப்புகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
முன்னதாக வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். அமைச்சர்கள் முத்துசாமி, கயல்விழி, மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் நன்றி கூறினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், 'சைமா' டெக்பா, சாய ஆலை உரிமையாளர் சங்கம், தமிழக தொழில் மின் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக்கொண்டு, எம்.பி., கனிமொழி பேசியதாவது:அனைத்து பகுதியிலும் உள்ள அனைத்து மக்களின் கோரிக்கைகளை மனுக்களாகப் பெற்று அதனடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க முதல்வர் தெரிவித்தார். ஓட்டு போட்டவர்கள் மட்டுமின்றி ஓட்டு போடாதவர்களுக்குமான ஆட்சியாக இது உள்ளது. மக்கள் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கையை தயார் செய்ய உள்ளோம். மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பல தரப்பையும் சந்தித்து அவர்கள் எதிர்பார்ப்புகளை கோரிக்கைகளாக பெற்று வருகிறோம். நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம், அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்தடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான தேர்தலாக இந்த தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.