/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் போலீஸ் அதிகாரி ஆஜராக உத்தரவு 'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் போலீஸ் அதிகாரி ஆஜராக உத்தரவு
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் போலீஸ் அதிகாரி ஆஜராக உத்தரவு
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் போலீஸ் அதிகாரி ஆஜராக உத்தரவு
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் போலீஸ் அதிகாரி ஆஜராக உத்தரவு
ADDED : செப் 25, 2025 12:29 AM
கோவை: சிங்காநல்லுாரில் வசிப்பவர் பொங்கலுார் பழனிசாமி; தி.மு.க., ஆட்சி காலத்தில்,2006-2011 வரை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்சம்ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, 2011, நவ., 28ல் வழக்கு பதியப்பட்டு, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. பின், சார்பு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஜூலையில் மீண்டும், கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான சண்முகப்பிரியாவிடம், எதிர் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய, கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
நேற்று விசாரணைக்கு வந்தபோது, பழனிசாமி தரப்பில் வக்கீல் அருள்மொழி ஆஜரானார். விசாரணைஅதிகாரி ஆஜராகவில்லை.
அரசு தரப்பு வக்கீல் தாக்கல் செய்த மனுவில், 'வழக்கின் புலன்விசாரணை அதிகாரி, குறுக்கு விசாரணைக்கு ஆஜராக, வழக்கை ஒத்திவைக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தனர். அதனால், அக்., 6க்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.