/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வினியோகம்; வரும் 14ம் தேதி வரை வழங்க ஏற்பாடுரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வினியோகம்; வரும் 14ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வினியோகம்; வரும் 14ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வினியோகம்; வரும் 14ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வினியோகம்; வரும் 14ம் தேதி வரை வழங்க ஏற்பாடு

கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது. தாசில்தார் சிவகுமார் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பை ஆய்வு செய்தார். கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில், 3 ரேஷன் கடைகளில், 2,900 கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
வால்பாறை
வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 16,079 ரேஷன் கார்டுகளுக்கு, 43 ரேஷன் கடை வாயிலாக பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நேற்று துவங்கியது. கூட்ட நெரிசலை தவிர்க்க முன் கூட்டியே 'டோக்கன்' வழங்கப்பட்டது.
உடுமலை
உடுமலை தாலுகாவிலுள்ள, 182 ரேஷன் கடைகள் வாயிலாக, 94,201 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று முதல், ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் தொகுப்பு வினியோகம் துவங்கியுள்ளது.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 63 ரேஷன் கடைகள் வாயிலாக, முதலில், 33,745 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு, நேற்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.


