ADDED : செப் 30, 2025 12:47 AM

கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைக் காவலர்களுக்கு 12,892 ரூபாய், துாய்மை பணியாளர்களுக்கு 14,892 ரூபாய், மேல்நிலை நீர்த்தொட்டி இயக்குபவர்களுக்கு 14,892 ரூபாய் என அரசாணை 62/2017 படி வழங்க வேண்டும், உள்ளாட்சிகளில் துாய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து 480 நாட்கள் வேலை செய்துள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கழிவு அகற்றுதல், துாய்மைப் பணிகள் இயந்திரமாக்கப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


