Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிகளில் மழை கால பாதுகாப்பு நடவடிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளிகளில் மழை கால பாதுகாப்பு நடவடிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளிகளில் மழை கால பாதுகாப்பு நடவடிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளிகளில் மழை கால பாதுகாப்பு நடவடிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

ADDED : அக் 23, 2025 10:50 PM


Google News
பொள்ளாச்சி: மழையின் தாக்கம் தொடர்ந்து காணப்படுவதால், பள்ளிகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமையாசிரியர்கள் 'அலெர்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மழை பெய்கிறது. அதன்ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், கடந்த இரு தினங்களாக, விடாது பெய்யும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில், அரசுத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவர்கள், ஜர்க்கின் அணிந்தும், குடை பிடித்தவாறும் பள்ளி, கல்லுாரி சென்று திரும்புகின்றனர்.

இந்நிலையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, தலைமையாசிரியர்கள் 'அலெர்ட்' செய்யப்பட்டுள்ளனர். அவர்களும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நீர்நிலைகள் அமைந்துள்ள வழிப்பாதையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பதிலாக, பாதுகாப்பான பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அதிலும், சைக்கிள் பயன்படுத்த வேண்டாம் என, தெரிவிக்கப்படுகிறது.

வகுப்பறைகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளதா, மின் கசிவு ஏதேனும் உள்ளனவா என ஆய்வு நடத்தப்படுகிறது. மழையின் பாதிப்பு அதிகமானால், பாதுகாப்பு கருதி, தலைமையாசிரியர் அறை நீங்கலாக, பிற அறைகளுக்கான மின் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

பழுதடைந்த கட்டடங்களில் மாணவர்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது, வளாகம், கட்டட மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து, உடனடியாக வெளியேற்றப்படுகிறது. பருவ கால மாற்றங்களால் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதற்கேற்ப மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us