/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தரைமட்ட பாலத்தை உயர்த்தணும்! விபத்துகளை தவிர்க்க கோரிக்கை தரைமட்ட பாலத்தை உயர்த்தணும்! விபத்துகளை தவிர்க்க கோரிக்கை
தரைமட்ட பாலத்தை உயர்த்தணும்! விபத்துகளை தவிர்க்க கோரிக்கை
தரைமட்ட பாலத்தை உயர்த்தணும்! விபத்துகளை தவிர்க்க கோரிக்கை
தரைமட்ட பாலத்தை உயர்த்தணும்! விபத்துகளை தவிர்க்க கோரிக்கை
ADDED : செப் 24, 2025 11:23 PM

வால்பாறை: விபத்தை தவிர்க்க ரொட்டிக்கடை தரை மட்டப்பாலத்தை உயர்த்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை -- ஆழியாறு வரையிலான மலைப்பாதையில், பல்வேறு இடங்களில் தரைமட்ட பாலம் உயர்த்தப்படாமல் உள்ளது.குறிப்பாக வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை செல்லும் ரோட்டில் உள்ள தரைமட்டப்பாலம் உயர்த்தப்படாமல் உள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
வால்பாறையில், பல்வேறு இடங்களில் தரைமட்ட பாலங்கள் உயர்த்தப்படாமல் உள்ளது. ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், தரைமட்டப்பாலம் உயர்த்தப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வால்பாறை நகரிலிருந்து ஆறு கி.மீ., தொலைவில் உள்ள ரொட்டிக்கடை பகுதியில் உள்ள தரைமட்டப்பாலம் குறுகலாக உள்ளதால், பாலத்தில் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவதோடு, உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும், குறுகலான பாலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்ல முடியாமலும், எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட முடியாமலும் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகிறோம். குறிப்பாக, மழை காலங்களில் பாலத்தில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ரொட்டிக்கடை பகுதியில் உள்ள குறுகலான தரைமட்ட பாலத்தை உயர்த்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையில் இந்த ஆண்டு மழையினால் சேதமடைந்த தடுப்புச்சுவர், ரோடு உள்ளிட்ட பணி, மழை காரணமாக துவங்கப்படாமல்உள்ளது.
மழை பாதிப்பு தொடர்பான பணிகள் நிறைவடைந்த பின், வால்பாறை - ஆழியாறு இடையே உள்ள ரோட்டில் குறுகலாக உள்ள பாலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, திட்ட மதிப்பீடு செய்து பாலங்களை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.