/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உறுப்பு தான விழிப்புணர்வு ராமகிருஷ்ணாவுக்கு அங்கீகாரம் உறுப்பு தான விழிப்புணர்வு ராமகிருஷ்ணாவுக்கு அங்கீகாரம்
உறுப்பு தான விழிப்புணர்வு ராமகிருஷ்ணாவுக்கு அங்கீகாரம்
உறுப்பு தான விழிப்புணர்வு ராமகிருஷ்ணாவுக்கு அங்கீகாரம்
உறுப்பு தான விழிப்புணர்வு ராமகிருஷ்ணாவுக்கு அங்கீகாரம்
ADDED : செப் 25, 2025 12:37 AM

கோவை: தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உறுப்பு தான தின நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, உறுப்பு தானத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக தமிழக அரசால் கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி, உறுப்பு தானம் செய்த குடும்பங்கள், மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியோர் மாநிலம் முழுவதும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்திய பங்களிப்பை பாராட்டும் விதமாக நடத்தப்பட்டது.
2024-25ம் நிதியாண்டில் இறந்த நன்கொடையாளர் உறுப்பு தான திட்டத்தில் சிறப்பான பங்களிப்பை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உறுப்பு தான விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழிகளில் சிறப்பான செயல்திறனுக்கான பெருமைமிகு பாராட்டு விருது வழங்கப்பட்டது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருது வழங்க, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்புத் துறை தலைவர் டாக்டர் பிரகதீஸ்வரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் விஸ்வநாத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உறுப்பினர் செயலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தார்.