/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவிநாசி ரோடு மேம்பாலத்தில் ஏறுதள பகுதியில் தடுப்புச்சுவர் அவிநாசி ரோடு மேம்பாலத்தில் ஏறுதள பகுதியில் தடுப்புச்சுவர்
அவிநாசி ரோடு மேம்பாலத்தில் ஏறுதள பகுதியில் தடுப்புச்சுவர்
அவிநாசி ரோடு மேம்பாலத்தில் ஏறுதள பகுதியில் தடுப்புச்சுவர்
அவிநாசி ரோடு மேம்பாலத்தில் ஏறுதள பகுதியில் தடுப்புச்சுவர்
ADDED : செப் 23, 2025 11:04 PM

கோவை; கோவை, அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., நீளத்துக்கு மாநில நெடுஞ்சாலைத் துறையால், மேம்பாலம் கட்டப்படுகிறது. இறுதிக்கட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன.
மேம்பால வழித்தடத்தில், தலா நான்கு இடங்களில் ஏறு, இறங்கு தளங்கள் திட்டமிடப்பட்டு, கட்டுமானப் பணி நடக்கிறது. பி.ஆர்.எஸ்., மைதானம் அருகே திட்டமிட்ட ஏறு தளத்துக்கு துாண்கள் அமைப்பது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது.
அங்கு, ஏறுதளம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஏறுதளத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தை அணுகும் இடத்தில் உள்ள இடைவெளியால் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க, தற்காலிகமாக தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'இம்மாத இறுதிக்குள் மேம்பாலப் பணிகளை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஏறு தளம், இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. புதிய தொழில்நுட்பத்தில் ஒரே நாள் இரவில் தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் நோக்கிச் செல்வோர், பி.ஆர்.எஸ். மைதான ஏறுதளத்தில் வருவோர், மேம்பாலத்தை அணுக விடப்படும் இடைவெளியில் விபத்தை சந்திக்கக் கூடாதுஎன்பதற்காக, தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. ஏறுதளம் அமைக்கும்போது, தேவைக்கேற்ப இடித்து, வசதி ஏற்படுத்தப்படும்' என்றனர்.