/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு மருத்துவமனையில் சாலை அமைக்கும் பணி அரசு மருத்துவமனையில் சாலை அமைக்கும் பணி
அரசு மருத்துவமனையில் சாலை அமைக்கும் பணி
அரசு மருத்துவமனையில் சாலை அமைக்கும் பணி
அரசு மருத்துவமனையில் சாலை அமைக்கும் பணி
ADDED : மே 20, 2025 12:06 AM

கோவை; கோவை அரசு மருத்துவமனையில், சாலை வசதி மேம்பாடு பணிகள், ரூ.9.65 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டுள்ளன.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், சாலைகள் மோசமாக இருந்ததால் பல்வேறு சிரமங்கள் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் முக்கியமாக, நோயாளிகளுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், முன்பு அறிவிக்கப்பட்ட படி, சாலை மேம்பாட்டு பணிகள் வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளன.
டீன் நிர்மலா கூறுகையில், ''தற்போது, கழிவுநீர் செல்வதற்கான பணிகள் நடந்துவருகிறது. இப்பணிகள் முடிந்த பின்னர், சாலை போடும் பணிகள் துவங்கும். இதன் மொத்த மதிப்பீடு, 9.65 கோடி ரூபாய், '' என்றார்.


