/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலையோர விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்; சாலைகள் பாதுகாப்பு சங்கம் தீர்மானம் சாலையோர விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்; சாலைகள் பாதுகாப்பு சங்கம் தீர்மானம்
சாலையோர விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்; சாலைகள் பாதுகாப்பு சங்கம் தீர்மானம்
சாலையோர விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்; சாலைகள் பாதுகாப்பு சங்கம் தீர்மானம்
சாலையோர விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்; சாலைகள் பாதுகாப்பு சங்கம் தீர்மானம்
ADDED : செப் 23, 2025 10:52 PM

பெ.நா.பாளையம்; தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின், 13வது மகாசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
சங்க செயலாளர் தேவேந்திரன் சங்கத்தின் வளர்ச்சி, குறித்து பேசினார். தேசிய நெடுஞ்சாலை துறை முன்னாள் கோட்ட பொறியாளர் மனுநீதி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.
அவர், கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினராகவும், நிரந்தர கவுரவ ஆலோசகராகவும் நியமனம் செய்யப்பட்டார். கூட்டத்தில்,தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி மற்றும் அவிநாசி ரோடுகளில் இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விளம்பர போர்டுகள் வைத்து சாலைகள் மறைக்கப்படுவதால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்ய நீண்ட நேரம் பணியில் ஆண் காவலர்களை போல பெண் காவலர்களும் ஈடுபடுகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்க அப்பகுதிகளில் நடமாடும் டாய்லெட்டுகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையில் சுற்றி தெரியும் விலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். துடியலூர் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டத்தில், 12 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் தலைவராக வேணுகோபால், செயலாளராக தேவேந்திரன், பொருளாளராக ராஜேந்திரன், துணைத் தலைவராக தமிழ்ச்செல்வன், துணை செயலாளராக பன்னீர்செல்வம், நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், செல்வராஜ், யோக நரசிம்மமூர்த்தி, ஜீவா, ராமமூர்த்தி, ராஜேஷ்குமார், திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் தேர்வு செய் யப்பட்டனர்.