ADDED : ஜூன் 04, 2025 07:52 AM

மேட்டுப்பாளையம்; புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ராஜ கிரீடம் அணிவித்து, மேளதாளம் முழங்க பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் ஓடந்துறை ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு, புதிதாக 22 சிறுவர், சிறுமியர் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை பள்ளியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ராஜா கிரீடம் அணிவிக்கப்பட்டது. பின்பு பள்ளி நுழைவாயில் முன்பு இருந்து, மேள தாளம் முழங்க, சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கு உள்ளே அழைத்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை புனித செல்வி தலைமை வகித்தார். ஆசிரியை உமா வரவேற்றார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், காரமடை வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர். ஆசிரியை அமலசிந்தியா நன்றி கூறினார்.